திருப்பூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 2 வாலிபர்கள் கைது - 5 இளம் பெண்கள் மீட்பு

வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் அவினாசி ரோடு கீரணி சந்திப்பு அருகே உள்ள கட்டிடத்தின் மேல்மாடியில் மசாஜ்சென்டர்செயல்பட்டு வருவதாகவும் இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதா கவாவும் மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை வரவழைப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அங்கு 5 பெண் கள், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து இளம் பெண்களை வரவைத்து அவர்கள் மூலம் மசாஜ் செய்ய வருபவர்களை ஆசை வார்த்தைகள் கூறி விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மசாஜ் சென்டர் நடத்திய செந்தமி ழ்ச்செல்வன், ஜெகதீசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து இளம் பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com