கோப்புபடம்.
கோப்புபடம்.

பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய 2 வாலிபர்கள் கைது

2 வாலிபர்கள் சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Published on

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவரையும், அவரது 17 வயது மகளையும் பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகன் கோபி என்கிற காளீஸ்வரன்(வயது26) ,கோவை மாவட்டம் சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சுபாஷ்(26) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும், இதனை தட்டிக்கேட்ட அவரது தாயாரையும் கெட்ட வார்த்தைகளில் அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் பலமுறை நடந்ததால் பயந்து போன அவர்கள் இது குறித்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த 2 வாலிபர்களையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் புகாரை விசாரிக்க தாமதமானதால் தாயும், மகளும் போலீஸ் நிலையத்தில் தீக்குளிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com