குன்னத்தூர் அருகே நண்பர் வீட்டில் திருடிய 2 பேர் கைது

கைக்கெடிகாரம் மற்றும் கவரிங் நெக்லஸ் காணாததை அறிந்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார்.புகாரின் பேரில் போலீசார் சம்பத்குமார், இளங்கோ இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது திருடியது தெரியவந்துள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

குன்னத்தூர் :

குன்னத்தூர் அருகே சின்னேகவுண்டன் வலசு கிராமம் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 52). இவர் நூல் வியாபாரம் செய்து வருகிறார். வியாபார விஷயமாக கடந்த 13-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் குமாரை அழைத்து நாளை நான் டெல்லி செல்ல இருக்கிறேன். எனவே இன்று இரவு என்னுடன் தங்கிக்கொள் என்று கூறியுள்ளார்.

குமார் அவருடைய நண்பரான காமராஜ் நகரைச் சேர்ந்த சம்பத்குமார் (36), திருவாமுதலியூரை சேர்ந்த இளங்கோ (27) இருவரையும் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அன்று இரவு அனைவரும் தங்கி உள்ளார்கள். 14-ம் தேதி காலை 6 மணி அளவில் குமார் ரவிசங்கரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். சம்பத்குமாரும், இளங்கோவும் வீட்டில் இருந்துள்ளார்கள். நேற்று ரவிசங்கர் டெல்லியில் இருந்து திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்து கைக்கெடிகாரம் மற்றும் கவரிங் நெக்லஸ் ஆகியவை காணாததை அறிந்து குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சம்பத்குமார், இளங்கோ ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது ரவிசங்கர் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்குளி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி சம்பத்குமார், இளங்கோஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com