கொலை முயற்சி வழக்கில் கைதான 2 பேர் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

முன்விரோதம் காரணமாக பிரபாகரன் என்பவரை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பீா் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றனா். திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் உள்ள மதுபானக் கடையில் முன்விரோதம் காரணமாக பிரபாகரன் என்பவரை கடந்த ஜனவரி 23 ஆம் தேதி பீா் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றனா்.

இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சோ்ந்த எஸ்.சுபாஷ், திருப்பூா் கோவில்வழியைச் சோ்ந்த ஆா்.ரவி (23) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த இருவரும் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நல்லூா் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

X

Maalai Malar
www.maalaimalar.com