

திசையன்விளை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் முன்னிலையில் அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பொன் இசக்கி பாண்டியன், உறுமன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வைகுண்டம் பொன் இசக்கி, உறுமன்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரோஜா, செல்வராஜ் வார்டு உறுப்பினர், கிளைச் செயலாளர் பெருமதி கனி, வார்டு உறுப்பினர் மாயாண்டி, பெருங்குளம், வேலு புலிக்குளம் கிளைச் செயலாளர் சவரிமுத்து, துரைகுடியிருப்பு கிளைச் செயலாளர் முஜிபுர் ரகுமான், பெட்டைகுளம் பீர்முகம்மது, வெற்றிவேல் கேரள மாநிலம் கோழிக்கோடு முன்னாள் மாவட்ட செயலாளர் காரி கோயில் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தங்களை தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் பரிமளம், இசக்கி பாபு, படையப்பா முருகன், மவுலின், ராஜா, ஜெஸ்ஸி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அனிதா பிரின்ஸ்,பொன் மீனாட்சி அரவிந்தன்,முருகன், ராதிகா, சூசை ரத்தினம், அருள்,பேபி, வாழ வந்த கணபதி, வின்சி, சகாயராஜ், முருகேசன், ராதாபுரம் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெனிஸ்டன், ராதாபுரம் அரவிந்த், நாவ்வலடி சரவணகுமார், உவரி அல்போன்ஸ், அந்தோணி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, கல்கண்டு மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.