5 மாதங்களுக்கு பின்னர் நெல்லை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

நெல்லை மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமடைந்தது. நெல்லை மாவட்டத்திலும் ஏராளமானோர் பாதிக்கப் பட்டனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக தினசரி தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை இலக்கத்திலேயே தொற்று பாதிப்பு இருந்தது.

அதிலும் பெரும்பாலா னோருக்கு லேசான அறிகுறி இருந்ததால் அவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் இன்று மாவட்டத்தில் நூற்றுக் கணக் கானோருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் யாருக்கும் தொற்று இல்லாமல் இருந்தது. அதன் பின்னர் இன்று தொற்று கண்டறியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.

 இதே நிலை தொடர்ந்து நீடிக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com