நெல்லை மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

நெல்லையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்று 8 வட்டாரங்களில் பாதிப்பு பூஜ்யமாக உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. பெரும்பாலான வட்டாரங்களில் பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்று வெளியான பரிசோதனை முடிவில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதியில் மட்டும் 5 பேருக்கும், பாளை பகுதியில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று வேறு எந்த வட்டாரங்களிலும் பாதிப்பு இல்லை. அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு, மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகவே உள்ளது.

பாதிப்பு குறைந்து மீண்டும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com