நெல்லை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

நெல்லை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள தெற்குபட்டி கிருஷ்ண ன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி சுப்புலெட்சுமி(வயது 52). 

இவர் நேற்று மானூருக்கு சென்றுவிட்டு தெற்குபட்டிக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். தெற்குபட்டியில் உள்ள இசக்கியம்மன்கோவில் அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தின் காரணமாக ஆட்டோவை டிரைவர் மெதுவாக ஓட்டி சென்றுள்ளார்.

ஆனால் தனது தெரு வந்துவிட்டதாக நினைத்த சுப்புலெட்சுமி இறங்க முயன்றுள்ளார். அப்போது ஆட்டோவில் இருந்து அவர் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com