நெல்லை மாநகரில் கொரோனா பாதிப்பு குறைகிறது

நெல்லை மாவட்டத்தில் இன்று 245 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆகும். இதனால் மாநகரில் பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லையில் இன்று 245 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநகர பகுதியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியிருந்தது.

இந்நிலையில் இன்று மாநகர பகுதியில் 68 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ராதாபுரத்தில் 45 பேருக்கும், வள்ளியூரில் 43 பேருக்கும், நாங்குநேரியில் 19 பேருக்கும், 

களக்காட்டில் 15 பேருக்கும், பாப்பாகுடியில் 7 பேருக்கும், மானூரில் 6 பேருக்கும், அம்பையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவருடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இவர்களது வீடுகளில் கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர் தூவும் பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று வரை 60 ஆயிரத்து 385 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றுடன் சேர்த்து மொத்த பாதிப்பு 60 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 55 ஆயிரத்து 843 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டத்தில் இதுவரை 443 பேர் பலியாகி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com