நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்தது

நெல்லை மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 800 வரை காணப்பட்டது. இந்நிலையில் 25 நாட்களுக்கு பிறகு இன்று 84 ஆக குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து 3-வது அலை காரண மாக  கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது.

ஒரு நாள் பாதிப்பு 800-ஐ கடந்து அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வருகிறது.  

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று வெளியான பரிசோதனை முடிவில் 84 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 6-ந்தேதி 73 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அசுரவேகத்தில் உயரத் தொடங்கியது.

இந்நிலையில் சுமார் 25 நாட்களுக்கு பிறகு இன்று பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் கீழாக வந்துள்ளது.  

இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் மாநகர பகுதியில் 31 பேருக்கும், ராதாபுரத்தில் 14 பேருக்கும், வள்ளியூரில் 18 பேருக்கும், அம்பையில் 11 பேருக்கும், பாளையில் 4 பேருக்கும், சேரன்மகாதேவியில் 3 பேருக்கும், களக்காட்டில் 2 பேருக்கும், மானூரில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

மாவட்டத்தை பொறுத்தவரை ராதாபுரம், வள்ளியூர், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பாப்பாக்குடியில் யாருக்கும் இன்று தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

மாநகர பகுதியைத் தொடர்ந்து மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com