நாங்குநேரியில் கோவில் தேரோட்டத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

நாங்குநேரியில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது பெண்ணிடம் மர்மநபர்கள் 8 பவுன் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நாங்குநேரி அருகே உள்ள ஆலடிபுதூரை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி லெட்சுமி(வயது 60).

இவர்கள் 2 பேரும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அன்னதானம் சாப்பிடு–வதற்காக மண்டபத்திற்கு சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது லெட்சுமியின் கழுத்தில் கிடந்த தங்க செயினை காணவில்லை.

இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் யாரோ செயினை பறித்து சென்றதை அறிந்த கணபதி நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். திருட்டு போன 8 பவுன் நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com