நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

நெல்லை மருத்துவக் கல்லூரியில் பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டின் படி மாணவ- மாணவிகளை சேர்ப்பதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 

முதல்கட்டமாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  இதில் தேர்வு பெற்ற மாணவ- மாணவிகள் அந்தந்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

நெல்லை மருத்துவக் கல்லூரியில் மட்டும் இதன்படி 16 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளார்கள். சிறப்பு இட ஒதுக்கீட்டின் படி 5 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

இந்தநிலையில் பொதுப்பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டின் படி மாணவ- மாணவிகளை சேர்ப்பதற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நெல்லை மருத்துவக் கல்லூரியில் நடந்தது. 

இதற்காக இன்று சுமார் 240 மாணவ&மாணவிகள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்து இருந்தார்கள். அவர்களுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம் ஆகியோர் முன்னிலையில் \

4 குழுக்களாகப் பிரிந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடத்தப்பட்டது.  

தொடர்ந்து இன்றும் நாளையும் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடைபெறும். வருகிற 15-ந் தேதி பொதுப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீடு பிரிவில் மாணவ- மாணவிகளுக்கு எந்தெந்த மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் அறிவிக்கப்படும். 

மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான ஆணை வருகிற 16-ந் தேதி வழங்கப்படும். இதை தொடர்ந்து வருகிற 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர கால அவகாசம் வழங்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com