பாளையில் 64 கிலோ குட்கா பறிமுதல் - 3 பேர் கைது

பாளையில் விற்பனைக்காக கொண்டு சென்ற 64 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் அறிவுறுத்தலின் பேரில், துணை கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐகிரவுண்டு பள்ளி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ்  நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

 அவர்கள் பாவூர்சத்திரம் கல்லூரணி சாலையை சேர்ந்த ஜெயராம் (வயது 28), கடையத்தை சேர்ந்த பாஸ்கர் (35) மற்றும் முக்கூடல் சுப்பையா தெருவை சேர்ந்த ராஜ் (55) என்பது தெரியவந்தது.

 மேலும்    அவர்கள் வைத்திருந்த சாக்கு பைகளை சோதனை செய்ததில் விற்பனைக்காக 64 கிலோ மதிப்புடைய குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.  இதன் மதிப்பு ரூ. 62 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த  குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com