

நெல்லை:
மானூர் அருகே உள்ள அளவந்தான்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது39). லாரி டிரைவர். இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மானூர் அருகே உள்ள சிலுவை கோவில் அருகே சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது.
பின்னர் அரிவாளால் மிரட்டி அவரிடம் இருந்து ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போன்களை பறித்தனர். பின்னர் அவர்கள் அருகே இருந்த ஏ.டி.எம்.க்கு சென்று அவரது கார்டில் இருந்து ரூ.2 ஆயிரத்தை எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக அலெக்சாண்டர் மானூர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் பாளையை சேர்ந்த சுடலைமணி (23), செந்தில்குமார் (19), மகாராஜன் (22) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்களை பாளை சிறையிலும் அடைத்தனர்.