ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

ஏர்வாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஏர்வாடியை சேர்ந்த சுடலைமணி (27), கோதைசேரியை சேர்ந்த ருக்மணி (37) ஆகியோர் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்களிடம் 200 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ.200 இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் களுக்கு கஞ்சா விற்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com