காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது

பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.இதில் தொடர்புடையதாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீசி கைதானவர்கள்.
பெட்ரோல் குண்டு வீசி கைதானவர்கள்.
Published on

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆணை விழுந்தான் குளத்தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த் (வயது 26) இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாநில மாணவரணி இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டிலை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் வீட்டு கதவில் இருந்த திரைச் சேலை மட்டும் எரிந்து சாம்பலானது.

இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ேலும் இவ்வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பாலாயி குடிகாடு பகுதியை சேர்ந்த கவிக்குமார் (வயது 26), பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 28), ஏனாதி மேலத்தெரு பகுதியை சேர்ந்த ரெங்கநாத் (வயது 26) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இதில் தொடர்புடையதாக கூறப்படும் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com