தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வருவதற்குள், உடல் முழுவதும் தீ பரவி, மீனாட்சி சுருண்டு கீழே விழுந்தார். உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com