வண்டல் மண் எடுக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்ட ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல்மண், சவுடுமண் களிமண் போன்ற சிறுவகை கனிமங்களை விவசாயம், வீட்டுஉபயோகம், மண்பா ண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்து க்கொள்ள அனுமதி அளிக்க ப்படுகிறது.

இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 186 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து மண் எடுத்து விவசாய நிலங்களை மேம்படுத்துதல் வீட்டு உபயோகம் மற்றும் மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தி க்கொள்ளலாம். இதன்படி தஞ்சாவூரில் மூன்று குளங்கள், திருவையாறில் 2, ஒரத்தநாட்டில் 35, பூதலூரில் 3, பாபநாசத்தில் 3, பட்டுக்கோட்டையில் 79, பேராவூரணியில் 61 என மொத்தம் 186  ஆறு குளங்களில் இருந்து சிறுவகை கனிமங்களை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ள ஏரி மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச்செல்ல கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சம்பந்த ப்பட்ட வட்டாட்சியர்களின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி விண்ணப்ப தாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம் வண்டல் மண், களிமண் எடுக்க விண்ணப்பிக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ள அல்லது அதனை சுற்றியுள்ள கிராமத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்தில் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமல் மற்றும் புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

பொது மக்களின் சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 30 கன மீட்டருக்கு மிகாமல் மண் இலவசமாக எடுத்து க்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்கள்சொந்த உபயோ கத்திற்கு வண்ட ல்மண்,களி மண் போ ன்றவை தேவைப்ப டுவோர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் விண்ணப்பித்து கலெக்ட ரிடம் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com