புளியங்குடி அருகே ஓடையில் மணல் திருட்டு-ஜே.சி.பி. டிரைவர் கைது

புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியில் முத்துப்பாறை ஓடையில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஜே.சி.பி. டிரைவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி பகுதியில் முத்துப்பாறை ஓடை உள்ளது. இந்த ஓடை பகுதியில் சிலர் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது சிலர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடையில் இருந்து மணலை அள்ளி கரையில் கொட்டி கொண்டிருந்தனர்.

அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.போலீசார் அவர்களை விரட்டி சென்றதில் ஜே.சி.பி. டிரைவரான வெள்ளானகோட்டையை சேர்ந்த அண்ணாத்துரை பிடிபட்டார். ஜே.சி.பி. உரிமையாளரான டி.என்.புதுக்குடியை சேர்ந்த தேன்ராஜ் தப்பியோடி விட்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாத்துரையை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி.யை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய தேன்ராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com