புதூர் பேரூராட்சியில் இயற்கை உரம் தயார் செய்யும் பணி ஆய்வு

புதூர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயார் செய்யும் பணியை பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் ஆய்வு செய்தார்.
வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயார் செய்வதை பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் ஆய்வு செய்த காட்சி.
வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயார் செய்வதை பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் ஆய்வு செய்த காட்சி.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம், புதூர்(செ) முதல் நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு பூங்காவை பேரூராட்சி மன்றத்தலைவர், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவி சங்கர், வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் தயார் செய்வது குறித்து ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். அப்போது செயல் அலுவலர் குமார் பாண்டியன், துணைத்-தலைவர் ஹக்கிமாள் பானு ஷேக் அப்துல்லா,  தி.மு.க புதூர்(செ) பேரூர் கழக செயலாளர், கோபால் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வளமீட்பு பூங்காவில் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயார் செய்து குறித்து பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் பேரூராட்சி தலைவர் ரவிசங்கர் வளமீட்பு பூங்காவில் ஆய்வு செய்ததில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com