செங்கோட்டை கோவிலில் திருவிளக்கு பூஜை

செங்கோட்டையில் உள்ள செல்வ விநாயகர், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கொரோனா தொற்று குறைந்திட திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நடந்தது.
கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த காட்சி.
கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த காட்சி.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை-வல்லம் ரோட்டில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உலக நன்மை மற்றும் கொரேனா தொற்று குறைந்திட வேண்டி 16-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி வம்பளந்தான் முக்கு விநாயகர் கோவில் முன்பு இருந்து பால் குடம், அக்னி சட்டி ஊர்வலம் மேள வாத்தியங்களுடன் தொடங்கி கோவிலை வந்தடைந்தது.

பின்னர் இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகருக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது.

மேலும் ஒமைக்ரான் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com