குண்டாறு பழைய, புதிய பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்ப்பு

செங்கோட்டை நகருக்கு செல்லும் மிக முக்கிய பாலமான குண்டாறு புதிய மற்றும் பழைய பாலங்களில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருளில் கிடக்கும் குண்டாறு புதிய பாலம்
இருளில் கிடக்கும் குண்டாறு புதிய பாலம்
Published on

செங்கோட்டை:

கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே செங்கோட்டை நகருக்குச் செல்லும் மிக முக்கிய பாலமாக குண்டாறு பாலம் அமைந்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிப் படைந்தததால் பாலத்தின் அருகில் புதியபாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

 இந்நிலையில் தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் புதியபாலம் கட்டுவதற்காக சுமார் ரூ. 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து,   2019-ம் ஆண்டு பணிகளைத் தொடங்க அரசாணை பிறப்பிக்கபட்டது.

அதனை தொடர்ந்து  செங்கோட்டை - பிரானூர் பார்டர் அருகில் அமைந்துள்ள பழைய குண்டாற்று பாலம் அருகே புதியபாலம் ஓராண்டு காலமாக பணிகள் நடந்தது.

இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு  மக்கள் பயன்பாட்டில் இரு பாலங்களும் செயல்பட்டு வருகிறது. இதில் புதிய, பழைய பாலங்கள் என இருபாலங்கள் அமைந்துள்ளது.

இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அண்டை மாநில மான கேரள மாநிலத்திற்கு சென்று வருகின்றன. அவ்வாறு வந்து செல்லும் வாகனங்கள்  இரு பாலங்கள் வழியாகவும், சென்று வருகின்றன.

 இதில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை இருபாலங்களிலும் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இவ்வழியாக நடந்து செல்லும்  பொதுமக்களும் அச்சத்துடனே நடந்து செல்கின்றனர்.

எனவே அனைத்து தரப்பினரின் நலன்கருதி இருபாலங்களிலும் மின்விளக் குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com