சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் முகாமை தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செந்தில்குமார், முத்துலட்சுமி, மேனகா, உடற்கல்வி இயக்குனர் கணேசன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலநீலிதநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன சுஜாகர் தலைமையில் குருக்கள்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தினர்.

இந்த முகாமில் 120 மாணவ-மாணவிகள் மற்றும் 15 பேராசிரியர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com