சுரண்டை அருகே கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு

சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சமையல் தொழிலாளி அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரை காணாமல் உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாம்பவர்வடகரை பெரிய குளத்திற்கு அருகே உள்ள கிணற்றில் நேற்று மாலை அவரின் உடல் மிதந்தது.

இதைப்பார்த்த வயல்வெளிகளில் வேலை செய்தவர்கள் சாம்பவர் வடகரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பலியான முருகன் பல்வேறு நோய்கள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com