லாரியில் பேட்டரி திருட்டு- 2 பேர் கைது

சாம்பவர்வடகரையில் லாரி மற்றும் டிராக்டரில் பேட்டரிகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

சாம்பவர்வடகரை:

சாம்பவர் வடகரை பகுதியில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மற்றும் லாரியில் இருந்த பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தன.

இதுதொடர்பாக வாகனங்களின் உரிமை யாளர்கள் சாம்பவர்வடகரை போலீசில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

அதில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டது விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சின்னதம்பி(வயது 19) மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com