நீட் தேர்வில் வெற்றிபெற்ற செங்கோட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டில் படித்து முடித்த 5 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா நூலகத்தில் நடைபெற்றது.
வெற்றிபெற்ற  மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டில் படித்து முடித்த லோகேஸ்வரி, சுபாஸ்ரீ, ஐஸ்வர்யா, பாத்திமா சைனியா, சீதாதேவி ஆகிய 5 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். 

செங்கோட்டை நகரமக்களுக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். 

மேலும் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம், எஸ்.ஆர்.எம். பள்ளி ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்று பேசினார்.

 சேகர், தென்காசி வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், ஓவிய ஆசிரியர் முருகையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குற்றாலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலகர் ராமசாமி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com