தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் கைது

முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது.சம்பவத்தன்று முருகன், தம்பியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெர்மல் கோவில்பிள்ளைநகரை சேர்ந்தவர் முருகன் (வயது29). தொழிலாளி. இவரது மனைவி முத்து லெட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கத்திக்குத்து

முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதில் கணவருடன் கோபித்து கொண்டு அவரது மனைவி முருகனின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதையறிந்த முருகன் பெற்றோர் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதற்கிடையே முருகனின் தம்பி மகேஷ் என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன், தம்பியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த முருகன் கத்தியால், மகேசை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். பலத்த காயமடைந்த மகேஷ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அண்ணன் கைது

இது தொடர்பாக தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com