மேலப்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; டெய்லர் கைது

மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலப்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; டெய்லர் கைது
Published on

நெல்லை:

மேலப்பாளையம் ஞானியாரப்பா 7-ம் தெருவை சேர்ந்தவர் ராஜ் (வயது 47). இவர் வீட்டுடன் சேர்த்து டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார்.

இது குறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். உடனே சிறுமி நடந்த விபரத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து டெய்லர் ராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com