நிழற்குடை மீது ஜீப் மோதி விபத்து: வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி

ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது.ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
நிழற்குடை மீது ஜீப் மோதி விபத்து: வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
Published on

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வனவராக பணியாற்றி வந்தவர் ரகுநாதன் (40). கேரளாவைச் சேர்ந்த மர வியாபாரி மார்த்தாண்டம் ராஜன் (43), கொல்லிமலை அரியலூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர்கள் 3 பேரும் நேற்றிரவு சேலம் நோக்கி ஜீப்பில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் இரவு 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் இருந்த ஒரு நிழற்குடையில் அவர்கள் வந்த ஜீப் நிலைதடுமாறி மோதி விபத்தானது. இதில் ஜீப்பில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து தகவல் தெரிந்ததும் பேளுக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் எதற்காக சேலம் சென்றார்கள்? விபத்தான ஜீப்பை ஓட்டி வந்தது மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜனா? அல்லது வேறு யாராவது ஓட்டி வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com