

விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமம் டேனியல் நகரை சேர்ந்தவர் சுவாமிதாசன். இவரது மகள் செல்லம்மாள் (வயது 39), திருமணம் ஆகவில்லை.
இவர் பிள்ளையார்நத்தம்- வேலிடுபட்டி சாலையோரம் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாய பணியை முடித்துவிட்டு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது விளாத்திகுளம் மதுரை ரோடு அண்ணாமலை நகரை சேர்ந்த பசும்பொன் பழனிச்சாமி என்பவரது மகன் கார்த்தி (29) திருமண தம்பதிகளை அழைத்துக்கொண்டு ஓட்டி வந்த கார் செல்லம்மாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் செல்லம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் செல்லம்மாள் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.