பெண் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பீளமேடு ஆவாரம்பாளையத்தில் உள்ள கூடுதல் டி.எஸ்.பி. அனிதா வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Published on

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கோவை மாநகர போலீசில் உதவி கமி‌ஷனராக பணியாற்றிவர் அனிதா. இவர் தற்போது கூடுதல் டி.எஸ்.பி.யாக உள்ளார். இவர் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருந்ததாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் பீளமேடு ஆவாரம்பாளையத்தில் உள்ள கூடுதல் டி.எஸ்.பி. அனிதா வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதனையொட்டி அவரது வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பெண் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா என்பவரது வீடு அன்னூரில் உள்ளது. அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com