ஊத்துக்கோட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவர் கைது

காரில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா பறிமுதல்- இருவர் கைது
Published on

ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வருவதாக பெரியபாளையம் மதுவிலக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிகாவுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் ஊத்துக்கோட்டை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நோக்கி சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை போலீசார் ஊத்துக்கோட்டை செக்போஸ்ட் அருகே மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காரில் மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த சூர்யா என்கிற சுரேஷ் (வயது35), சென்னை முகப்பேரை சேர்ந்த கோபி (வயது22 ) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், குற்றவாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com