

சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்...ஜாவத் புயல் எதிரொலி - தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்