

திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட நரசிங்கபுரத்தைச் சேர்ந்த அபிமன்யூ (21) என்பவரை மப்பேடு சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
ரவுடியான அபிமன்யூ மீது ஏற்கனவே ஆவடி டேங்க் பேக்டரி, சுங்குவார்சத்திரம், பட்டாபிராம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. தொடர்ந்து அவர் குற்றசெயல்களில் ஈடுபட்டார்.
இதையடுத்து அபிமன்யூவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து அபிமன்யூவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் உத்தரவிட்டார். இற்கான உத்தரவை மப்பேடு போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.