போலி ஆவணம் தயாரித்து திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.2½ கோடி நிலம் மோசடி- 3 பேர் கைது

சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலி ஆவணம் தயாரித்து திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் ரூ.2½ கோடி நிலம் மோசடி- 3 பேர் கைது
Published on

திருப்பூர்:

திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஊத்துக்குளி அருகே 2¾ ஏக்கர் நிலத்தை சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 71) என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ.2½ கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பிறகு நில ஆவணங்களை பார்த்தபோது அவை வேறு நபர் பெயரில் இருப்பதும், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னை மாதம்பாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (39), ரங்கராஜ் (41) ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com