நெல்லையில் கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதல்- 13 பேர் சஸ்பெண்டு

நெல்லையில் மோதலில் ஈடுபட்ட 13 மாணவர்களை கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
சஸ்பெண்டு
சஸ்பெண்டு
Published on

நெல்லை:

நெல்லை பேட்டையில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த கல்லூரி விடுதியில் உள்ள மாணவர்கள் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

உடனடியாக விடுதி காப்பாளர் அவர்களை சமரசம் செய்து வைத்தார். இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு வந்த அந்த மாணவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த பேட்டை போலீசார் மாணவர்களை சமதானம் செய்து விலக்கி விட்டனர்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட 13 மாணவர்களை கல்லூரி முதல்வர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com