திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Published on

திருவள்ளூர்:

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையை ஆற்றினார்.

இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.ஹரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம், திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர், சுதாகர், சிற்றம் சீனிவாசன் இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com