வாழ்த்து தெரிவிக்க நேரில் வர வேண்டாம்- திருநாவுக்கரசர் எம்.பி. வேண்டுகோள்

தனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு தனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்த்து தெரிவிக்க நேரில் வர வேண்டாம்- திருநாவுக்கரசர் எம்.பி. வேண்டுகோள்
Published on

சென்னை:

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எனது பிறந்த நாளான வருகிற 13-ந்தேதி அன்று நான் வெளியூரில் இருப்பதால் இவ்வாண்டு எனக்கு வாழ்த்து தெரிவிக்க நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தோழர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனது பிறந்த நாளன்று தங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஏழை எளியோருக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com