நாகர்கோவிலில் காங்கிரஸ் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்

விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.கொண்டாட்டத்தில் மாவட்ட,‌வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட‌ பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் காங்கிரஸ் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
Published on

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மண்பானையில் மகளிரணியினர் பொங்கலிட்டனர்.

பின்னர் விஜய் வசந்த் எம்.பி. தனது சொந்த செலவில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.

விழாவில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் போலிங் பூத் கமிட்டி தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், "நாகர்கோவிலில் உள்ள நமது அலுவலகத்தில் காங்கிரஸ் குடும்பத்தினருடன் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடினோம். மாவட்ட,வட்டார தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com