ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் சாப்ட்வேர் என்ஜினியர்  தற்கொலை
Published on

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பாலசுப்ரமணியம் தெருவில் வசித்து வந்தவர் விஜய் (வயது 36) இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், கவின், காரண்யா என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். விஜய் பெங்களூரில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு கொண்ட அவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன் பெரும் தொகையை சூதாட்டத்தில் இழந்தார். இதனால் விரக்தியில் இருந்து வந்தவர். கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று விஜய்யின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com