ஆளுநரின் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை - போலீசார் விளக்கம்

மாநிலத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையில், பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை:

மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் வாகனம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கொடிகளை வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறுகையில், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு முன் மூன்று அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. ஆளுநரின் கான்வாய் சென்ற நிலையில் கருப்புக் கொடிகளை அவர்கள் வீசியெறிந்தனர். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், கைதுசெய்து வாகனத்தில் ஏற்றியதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com