கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்- 16 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

சின்னணைந்தான்விளையில் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

என்.ஜி.ஓ.காலனி:

என்.ஜி.ஓ.காலனி அருகே சின்னணைந்தான் விளையில் கோவில் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட் டது.

இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ராபர்ட் சிங், ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் பணி புரியும் ராஜ்திலக் ஆகிய இருவரும் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த சிவக்குமார், பிரதீஷ், அய்யப்பன், பிரபாஸ் உள்பட 16 பேர் அங்கு நுழைவு வாயில் ஆர்ச்சில் வைக்கப்பட்டிருந்த கம்புகளை அகற்ற முயன்றதாக தெரிகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராபர்ட் சிங், ராஜ்திலக் இருவரும் கம்புகளை அகற்றக்கூடாது என்று கூறினர்.

அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறில் போலீசார் இருவரையும் கீழே பிடித்து தள்ளியதுடன் சரமாரியாக தாக்கினார்கள். கல்லை வீசியும் தாக்கினர். இதில் போலீஸ்காரர்கள் ராபர்ட் சிங், ராஜ்திலக் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ராபர்ட்சிங், சுசீந்திரம் போலீ சில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சிவக்குமார், அய்யப்பன், பிரதீஷ், பிரபாஸ் உள்பட 16 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com