சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி
நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி
Published on

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால், சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பரில் பதவி ஏற்றார்.

அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்தது. இதுதொடர்பான பரிந்துரையை கொலீஜியம் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com