சென்னையில் சொகுசு கப்பல் சுற்றுலா திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்கிற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.

சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டணங்களை பொறுத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் எனவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 அடுக்கு கொண்ட சொகுசுக் கப்பலில் 10 உணவகங்கள், பார்கள், ஸ்பா, கடைகள் உள்ளிட்டவை கப்பலில் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com