

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் போலீஸ் முகாம் அருகே நேற்று மாலை போலீஸ் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி, ஜம்மு, காஷ்மீரின் முன்னாள் முதல் அமைச்சர்கள் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், " ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.