திருட்டு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
திருட்டு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

தேவதானப்பட்டி:

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com