மதுரையில் மதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி குத்திக்கொலை

மதுரையில் மதுக்கடை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

மதுரை:

மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு. இவரது மகன் அக்னிராஜ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது பெற்றோர் சிறு வயதில் இறந்து விட்டனர். எனவே அக்னி ராஜ் தனது பெரியம்மா நாகரத்தினம் (வயது58) என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அதன் பிறகு குளித்து முடித்து விட்டு வெளியே சென்று வருவதாக பெரியம்மாவிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அக்னி ராஜ் வீடு திரும்பவில்லை.

எனவே நாகரத்தினமும் அவரது கணவர் ராமரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை ஜீவா நகர் 2-வது தெரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் பின்புறம் அக்னி ராஜ் படுகாயங்களுடன் கிடப்பதாக தகவல் வந்தது.

இதையடுத்து நாகரத்தினம் உறவினர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது அங்கு அக்னி ராஜ் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அக்னி ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அக்னி ராஜூக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. அக்னிராஜ் நேற்று இரவு ஜீவாநகர் பகுதியில் உள்ள தனியார் மதுபான கடைக்கு சென்று உள்ளார். அங்கு மதுகுடித்துவிட்டு சிறுநீர் கழிப்பதாக கடையின் பின்புறம் சென்றார்.

அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் அக்னிராஜூடன் தகராறில் ஈடுபட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அக்கினி ராஜை கத்தியால் சரமாரியாக குத்தியது. மேலும் கொலை வெறி கும்பல் அக்னி ராஜை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது.

இந்த தாக்குதலில் அவர் பரிதாபமாக இறந்துள்ளார்.அவரை கொன்றது யார்? முன்விரோதம் அல்லது பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? ஜெய்ஹிந்த்புரம் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com