இளம்பெண் கொலை வழக்கு- சதீஷ் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து

சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இளம்பெண் கொலை வழக்கு- சதீஷ் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து
Published on

சென்னை:

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு இருப்பதன் காரணமாக குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com