என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அம்பேத்கர் பெயரை வாக்கு வங்கிக்காக மட்டுமே பா.ஜ.க. பயன்படுத்துகிறது- கி.வீரமணி தாக்கு
- தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது.
- முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று தி.க. தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
சட்ட மாமேதை அம்பேத்கரும், பெரியாரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
பட்டுக்கோட்டை தாலுகா ஆழம்பள்ளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் மூலம் தீண்டாமை ஒழிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது. முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.
சில இடங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சுடுகாட்டுக்கு கூட பாதை கிடையாது. தற்போது தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மூலம் தீண்டாமை கொடுமை படிப்படியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
அம்பேத்கர் வகுத்த கொள்கை மற்றும் அவரை நாம் புரட்சியாளராக தான் பார்க்கிறோம். ஆனால் பா.ஜ.க.வோ அம்பேத்கர் பெயரை அரசியல் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.