சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து- காஞ்சிபுரம் பா.ஜனதா மாவட்ட செயலாளர் கைது

முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.
சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து- காஞ்சிபுரம் பா.ஜனதா மாவட்ட செயலாளர் கைது
Published on

காஞ்சிபுரம்:

பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் செல்வம். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் செல்வத்தின் அவதூறு கருத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜனதா மாவட்ட செயலாளர் செல்வத்தை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com